முகமூடியோடு வந்து பள்ளி மாணவர்களை கடத்த முயற்சி... பதறி ஓடி வந்த பெற்றோர்
முகமூடியோடு வந்து பள்ளி மாணவர்களை கடத்த முயற்சி... பதறி ஓடி வந்த பெற்றோர்
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களை கடத்த முயன்றதால் பரபரப்பு நிலவியது. பழைய வத்தலகுண்டுவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 210 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களை சிலர் கடத்த முயன்றதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.