
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் போதையில் உயர்கோபுர மின்விளக்கு டவரில் ஏறி மிரட்டல் விடுத்த நபரை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
பொன்னேரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு டவரில் போதையில் ஏறிய நபர்,
தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை நீண்ட நேரம் போராடி தீயணைப்பு துறையினர் சமாதானம் செய்து கீழே இறக்கி அழைத்து வந்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடியை சேர்ந்த ஆபிரகாம் என்பதும், இதே போல் இதற்கு முன்பும் அவர் இரு முறை டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.