லீக்கான மத சர்ச்சை ஆடியோ..! கல்லூரியில் புகுந்து பேராசிரியரை தாக்கிய மர்ம நபர்கள்..!

Update: 2024-12-04 03:30 GMT

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ மத பிரச்சாரத்தை செய்ததாக பேராசிரியரை இந்து அமைப்பினர் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில்பொறியியல் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் பணி செய்யும் செங்கையா, கிறிஸ்தவ மத பிரசாரத்தை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. மாணவர்களை மிரட்டி கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த ஆடியோ வெளியான வேளையில், இந்து அமைப்பினர் துணை வேந்தரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் துணைவேந்தர் கிறிஸ்தவ மத பிரச்சாரம் நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து செங்கையா அலுவலகத்திற்குள் நுழைந்த இந்து அமைப்பினர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரது மேஜையில் இருந்த மத புத்தகம் குறித்து ஆவேசம் ஆனவர்கள், அவரை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்துள்ளனர். அவரது செயல் குறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளனர். சம்பவத்தில் அவருடைய கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்