நற்பணி மன்ற நிர்வாகிக்கு திடீரென ஏற்பட்ட சோகம்..! உடனே போன் போட்டு விசாரித்த ரஜினி | Thanjavur

Update: 2024-12-22 02:10 GMT

கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நற்பணி மன்ற நிர்வாகியிடம், ரஜினிகாந்த் தொலைபேசியில் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக கும்பகோணத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து வரும் சத்ய நாராயணானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராகவுள்ள நிலையில், சத்யநாராயணனிடம் ரஜினி தொலைபேசியில் நலம் விசாரித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்