திடீரென சாலையில் திரண்ட மக்கள்.. திண்டிவனத்தில் பரபரப்பு..

Update: 2024-12-26 13:59 GMT

திண்டிவனம் அருகே வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல் செய்ய முயன்ற கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. கட்டளை கிராம மக்கள் திண்டிவனம்-மரக்காணம் சாலையை மறிக்க முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், அதிகாரிகள் தங்கள் பகுதியை பார்வையிட வரவில்லை என குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்