தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் பரிகார பூஜை செய்து கடலில் களையப்படும் ஆடைகள், கடற்கரையில் ஒதுங்கி புனித நீராடும் பக்தர்களுக்கு இடையூறை ஏற்படுத்துவதால் ஆடைகளை அகற்றக்கோரி கோவில் நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.