இனிக்க இனிக்க பேசி... இடியை இறக்கிய நபர் - நடுவீதியில் நின்ற மக்கள்... அரங்கேறிய அடுத்த அதிரடி
நாமக்கல் மாவட்டம் கங்காணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்.வேலப்பன், பல ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். அவரது நிதி நிறுவனத்தில் நாமக்கல், மோகனூர், பரமத்தி வேலூர், ராசிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பல லட்சக் கணக்கில் முதலீடு செய்தனர். ஆரம்பத்தில் பணம் கட்டியவர்களுக்கு வட்டித்தொகையை வழங்கி வந்த பொன்.வேலப்பன் பின்பு குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த பொன் வேலப்பனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவரது நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் வேறு யாராவது முதலீடு செய்திருந்தால், தகுந்த ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும் என மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.