"பாம்பு வந்து கடிச்சா ஒன்னும் பண்ண முடியாது"..தனித்தீவாக மாறிய பகுதி..பொதுமக்கள் பரபரப்பு பேட்டி
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கஜலட்சுமி நகர், தசரத நகர், ஜெய் அவென்யூ நகர், ராஜேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் வருவதாக அச்சம் தெரிவித்துள்ள மக்கள், மழைநீரை அகற்றி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.