சென்னை ரேபிடோ இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதை தட்டிக்கேட்ட பயணியை ஓட்டுநர் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜசேகர் என்பவர், திருவல்லிக்கேணியில் இருந்து நுங்கம்பாக்கத்திற்கு ரேபிடோ இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபோது, வாகனத்தை இயக்கிய கிதியோன் என்பவர் அதிவேகமாக சென்று கர்ப்பிணி மற்றும் பொதுமக்களை மோதுவதுபோல் சென்றார். இதையடுத்து, பயணத்தை ரத்து செய்வதாக ராஜசேகர் கூறியதால் கோபமடைந்த கிதியோன், அவரை கைகளாலும், ஹெல்மெட்டாலும் தாக்கியுள்ளார். பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், அவரை பிடித்து சிந்தாதிரிபேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தார்.