காலேஜ் முடிந்தும் வீடு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள்.. ஒவ்வொரு முறையும் ஆபத்தும் அபாயமும்..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் கல்லூரி மாணவ மாணவிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். கடையநல்லூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் பண்பொழி சாலை காசிதர்மம் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு சுமார் ஆயிரத்து 500 மாணவ மாணவிகள் படித்து தரும் நிலையில், மாலை கல்லூரி முடிந்ததும் முறையான பேருந்து வசதி இல்லாததால் மாணவ மாணவிகள் தனியார் ஆட்டோவை நம்ப வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். சில சமயங்களில் அதிக நபர்கள் ஆட்டோவில் ஏறுவதால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் உடனடியாக அரசு பேருந்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.