தமிழ் பேச தடுமாறிய பாரதியாரின் வம்சாவழி இளைஞர் - அதிர்ச்சியுடன் பார்த்த மக்கள்
கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்திருந்த பாரதியாரின் வம்சாவழி இளைஞர் இனியவன் ஜோசப், தமிழ் பேச தடுமாறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசின் வேர்களை தேடி திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பயிலும் தமிழக வம்சாவழியைச் சேர்ந்த 38 பேர், கீழடி அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து, அகழாய்வு பொருட்களை பார்த்து ரசித்தனர். அமெரிக்காவில் வசித்து வரும் பாரதியாரின் வம்சாவழி இளைஞரான இனியவன் ஜோசப், எட்டயபுரத்தை பார்த்தபோது எனது தமிழ்நாடு என நினைத்து பெருமை கொண்டதாக தெரிவித்தார். தமிழ்க்கவியான பாரதியின் வம்சாவழி இளைஞர், தட்டுத் தடுமாறி தமிழில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.