பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை உபா (UAPA) சட்டத்தில் கைது செய்யக்கோரி, கோவை காவல் ஆணையரிடம் சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், கோவையில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை பேசியபோது, தொண்டர் ஒருவர் கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்ல தயாராக இருப்பதாக கூறியதாக, குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை பயங்கரவாத செயலுக்கு துணை போவதாக குறிப்பிட்டுள்ள பியூஸ் மனுஷ், தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல், குறிப்பாக UAPA சட்டத்தின் கீழ் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.