குப்பையில் கிடைத்த பொக்கிஷம்... 1908 கிகி பிளாஸ்டிக்கில் உருவான பஸ் ஸ்டாப் - கலக்கும் கோவை
மறுசுழற்சி பிளாஸ்டிக் கழிவுகளால் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்ட பேருந்து நிறுத்தம், கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட எட்டாம் பாளையம் கிராமத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளைக் கொண்டு, தனியார் பங்களிப்புடன் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்துள்ளனர். அதை ஒன்றாக சேர்த்து அரைத்து காயை வைத்து, எளிதில் உடையாத அளவிலான போர்டுகளை செய்துள்ளனர். எளிதில் தீப்பிடிக்க முடியாத வகையில் செய்யப்பட்டு பேருந்து நிலையம் உருக்கியதாக அதன் வடிவமைப்பாளரும், அக்கிராம மக்களும் தெரிவித்துள்ளனர்.