கடலூர் மாவட்டம் விருதாசலம் அருகே, சிவா மற்றும் அபிமன்யு என்ற 2 இளைஞர்கள், மதுபோதையில் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அபிமன்யுவின் பாட்டி குறித்து, சிவா தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அபிமன்யு, மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சிவா உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் சிவாவின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.