BREAKING || நேற்று வழக்கு போட்ட போலீஸ்... இன்று உலகை விட்டே பிரியும் முடிவெடுத்த சோகம்

Update: 2024-12-25 15:53 GMT

ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று இரவு போக்குவரத்து புலனாய்வு போலீசாரால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக வழக்கு பதிவு செய்து இரு சக்கர வாகனத்தையும் செல்போனையும் பறி கொடுத்தவர் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் கொளத்தூர் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி/60. இவர் நேற்று இரவு வாலாஜாபாத் அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது படப்பை அருகே போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கிருஷ்ணமூர்த்தியை தடுத்து நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது அவர் மது அருந்தி இருப்பது தெரியவந்ததை அடுத்து கிருஷ்ணமூர்த்தியை காவல் நிலையம் அழைத்து வந்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக வழக்கு பதிவு செய்து அவருடைய இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்துவிட்டு அனுப்பி வைத்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தியிடம் பணம் இல்லாததால் 50 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று கிருஷ்ணமூர்த்தி ஒரகடம் அருகே காட்டுப்பகுதியில் கயிற்றால் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்த நிலையில் இருந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஒரகடம் காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்