டெல்லி ஷாஹீன்பாக் சந்தை பகுதியில் உள்ள காலணி ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தீ விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.