`போதை பொருட்கள் கடத்தல்?' - ஹோலி முடிந்து லட்சக்கணக்கில் தமிழகம் திரும்பும் வடமாநிலத்தினர்
வட மாநிலத்தில் இருந்து ஹோலி பண்டிகை முடிந்து திரும்பும் தொழிலாளர்களை போலீசார் தீவிர சோதனை செய்து ரயில் நிலையத்தில் வெளியே அனுப்பி வருகின்றனர். திருப்பூரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பார்த்து வரும் நிலையில், கடந்த மார்ச் 14ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு கூட்டம் கூட்டமாக சென்றிருந்தனர். இந்நிலையில் இன்று முதல் ஹோலி பண்டிகை முடிந்து புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி வர துவங்கி உள்ளனர்.இந்த சூழலை பயன்படுத்தி போதை பொருட்கள் ஏதேனும் கடத்தி வரப்படுகிறதா? என தொழிலாளர்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.