கனவிலும் மறக்க முடியா கிஃப்ட் கொடுத்த HM... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மாணவர்களை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்ற பள்ளி தலைமை ஆசிரியர் நெல்சன் பென்ராஜ், அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார். முதல் முறையாக விமானத்தில் பறந்து சென்னை வந்த 19 மாணவர்கள் மனதில் உயர்ந்த இடத்தை தலைமை ஆசிரியர் பிடித்துள்ளார்.
தங்களது கனவை நிறைவேற்றிய தலைமை ஆசிரியரின் செயலால் நெகிழ்ச்சி அடைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், சென்னையை சுற்றி பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்புகின்றனர்.