கோவையில் உள்ள மேம்பாலத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள், கையில் பீர் பாட்டிலுடன் பொதுமக்களை அச்சுறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. கோவை 100 அடி சாலையிலிருந்து அவிநாசி சாலையை நேரடியாக இணைக்கும் உயர்மட்ட மேம்பாலத்தில், ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள், கையில் பீர் பாட்டிலுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.