திருவாரூரில் சாலையில் தவற விட்ட பணப்பையை தூய்மைப் பணியாளரின் மகள், காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். நகராட்சி தூய்மைப் பணியாளராக பணியாற்றும் கனிமொழி என்பவரின் மகள் யுவஸ்ரீ, மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கைப்பை கீழே விழுந்ததைக் கண்டு எடுத்துச் சென்று பள்ளி ஆசிரியரிடம் கொடுத்தார். 2 ஆயிரத்து 500 ரூபாய் இருந்த அந்த பணப்பையை, ஆசிரியர்கள் மூலமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்ததை அடுத்து, மாணவி யுவஸ்ரீக்கு காவல் துறையினரும், ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.