குவிந்த காணிக்கை.. சபரிமலை மண்டல காலத்தில் மொத்த வருவாய் எவ்வளவு கோடி தெரியுமா..?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக
கடந்த நவம்பர் 15 தேதி நடை திறக்கப்பட்டது. நவம்பர்
16 முதல் மண்டலகால பூஜை தொடங்கி தொடர்ந்து 41
நாட்கள் நடைபெற்றது. மண்டல காலத்தில் மொத்தம் 32
லட்சத்து 49 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 28 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்திருந்தனர். மண்டல காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் மொத்த வருமானம் 297 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த வருட மண்டல காலத்தை விட சுமார் 82 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.