கிடைக்காத க்ளூ..! பள்ளி மாணவன் எங்கே..? - கதறும் தாய் - அதிரும் ராம்நாடு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவன யோகேஷ் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாயார், அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தும் சிறுவனைக் காணாததால் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தது, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.