“இதை பயன்படுத்தினால்..“ கம்மி விலையில் ரயிலில் போலாம்.. -ரயில்வே அறிவிப்பு...
ரயில்வே வாரிய உத்தரவின்படி, வரும் 20ம் தேதி முதல் ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM மூலம் UTS டிக்கெட் எடுக்கும்போது, டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, R-வாலெட்டை ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3 சதவீத சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது. இந்நிலையில், பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெறுவதை தவிர்த்து, UTS மொபைல் ஆப்பை பயன்படுத்தி எளிதில் டிக்கெட் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.