பார்-ரெஸ்டாரண்டில் திடீரென வெடித்த சிலிண்டர்கள் - தப்பி ஓடிய IT ஊழியர்கள் - பரபரப்பு காட்சிகள்

Update: 2024-12-21 10:30 GMT

ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சிலிண்டர்கள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. மாதாபூர் அருகே நாலெட்ஜ் சிட்டி அடுக்கு மாடி கட்டடத்தின் 5வது தளத்தில் பார் அன்ட் ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு பார் மூடப்பட்ட பிறகு அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த சிலிண்டகள் வெடித்து பெரும் அளவிலான சேதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்படுத்தினர்... தீ விபத்தைத் தொடர்ந்து அருகில் உள்ள கட்டடத்தில் செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்