தென்காசியை நடுங்க வைத்த தலை இல்லாத சடலம் - வெளியான திடுக் தகவல்கள்

Update: 2024-12-21 10:32 GMT

தென்காசி மாவட்டம் கருத்தபிள்ளையூரை சேர்ந்த இருதயராஜ் என்பவரின் தந்தைக்கு 2 மனைவிகள் இருந்த நிலையில், இருவரின் மகன்களுக்கு இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சொத்து பிரச்சினையில் இருதயராஜ் தனது தந்தையின் இரண்டாவது மனைவியின் மகனான ஜெயபாலனை அரிவாளால் வெட்டியுள்ளார்.

தற்போது மீண்டும் சொத்து தகராறு காரணமாக பிரச்சினை வெடித்துள்ள நிலையில், இருதயராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருதயராஜை சொத்து பிரச்சினை காரணமாக கொலை செய்தார்களா? அல்லது இச்சம்பத்தில் வேறு யாரும் தொடர்பு உள்ளனரா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்