கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தென் மாவட்டங்களை
நோக்கி செல்லும் மக்களால், செங்கல்பட்டு அருகே சென்னை,
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாலாற்று பாலம் முதல் பழவேலி வரை சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.