சம்பா பயிர்களை தாக்கும் கொடிய நோய்... மனம் நொந்து நிற்கும் விவசாயிகள்

Update: 2024-12-21 10:19 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சம்பா பயிர்கள் நோய் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஏனாநல்லூர், கீழசேத்தி, வடகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை குலை நோய் மற்றும் இலை சுருட்டுப்புழு தாக்கியுள்ளது. ஏற்கனவே ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக கூறிய விவசாயிகள், தற்போது நோய் தாக்குதலுக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து மருந்தடித்தும் பலனில்லை என வேதனை தெரிவித்தனர். இதனால், அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்