நெல்லையில் 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டு கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கடந்த 2023-ம் ஆண்டை காட்டிலும் 2024ம் ஆண்டில் கொலை சம்பவங்கள் 21 விழுக்காடு குறைவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024ம் ஆண்டில் நடந்த கொலை வழக்குகளில் சம்பந்தபட்ட 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு 203 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் போக்சோ சட்டத்தில் 100 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே சாதிய ரீதியிலான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக 38 போக்குவரத்து வழித்தடங்களும், 30 பள்ளிகளும் கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு பிரச்சனைகள் தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியிலான படுகொலைகள் 2024 ஆம் ஆண்டு நடைபெறவில்லை என்றும்,
மேலும் நடக்கவிருந்த 17 கொலைகள் காவல்துறையினரின் துரித மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.