குழந்தை பலியான விவகாரம்... பாய்ந்த நடவடிக்கை... மருத்துவர்கள் எடுத்த திடீர் முடிவு... மக்கள் அவதி
மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மகப்பேறு மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று ஒருநாள் புறநோயாளிகள் பிரிவை மருத்துவர்கள் புறக்கணித்ததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்... விசாரணையின் அடிப்படையில் பிரசவம் பார்த்த மருத்துவர் ரம்யா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.... இந்நிலையில்
மருத்துவர்களிடம் உரிய விசாரணை செய்யாமல் மருத்துவர் ரம்யா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை மட்டும் மருத்துவர்கள் புறக்கணித்துள்ளனர். 21 மருத்துவர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.