போலீசாரால் டிடி கேஸ் போடப்பட்ட நபர், வீட்டுக்கு செல்லும் வழியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், தனது சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் டிடி கேஸில் பிடித்தனர். இதனையடுத்து அவருடைய டூவீலரையும் செல்போனையும் வாங்கிவைத்துவிட்டு, அவரை போலீசார் அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் அவர் போகும் வழியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.