மெரினா கலங்கரை விளக்கத்தில் நடக்கும் இதுவரை பாராத காட்சிகள் - ஆச்சர்யமாக பார்த்து செல்லும் மக்கள்

Update: 2024-12-21 08:40 GMT

மெரினா கலங்கரை விளக்கத்தின் பத்தாவது தளத்தில் உள்ள ரேடாரின் ஆன்டனாவை ராட்சத கிரேன் மூலமாக மாற்றப்படுகிறது

பெங்களூரில் இருந்து வந்து 10க்கும் மேற்பட்டோர் மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

உலகில் கடல் பயணங்கள் தோன்றிய காலங்களிலேயே கலங்கரை விளக்கங்களும் தோன்றிவிட்டன. தூரத்தில் வரும் கப்பல்களுக்குக் கரையைக் காட்டுவதே கலங்கரை விளக்கங்களின் வேலை. தமிழ்நாட்டில் மொத்தம் 25 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. அவற்றுள் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருப்பது முக்கியமான ஒன்றாகும். சுமார் நாற்பத்து ஐந்து அடி உயரத்தில் பத்து தளங்களுடன் கட்டப்பட்ட இது சென்னையின் நான்காவது கலங்கரை விளக்கம் ஆகும்.

சென்னையின் நான்காம் கலங்கரை விளக்கமாக தற்போது இருக்கும் நாற்பத்து ஆறு அடி உயர சிவப்பு மற்றும் வெண்மை நிற பட்டைகளுடன் கூடிய முக்கோண கட்டடம்.

இது 1977ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தியாவிலேயே நகரத்தின் எல்லைக்குள்ளேயே இடம் பெற்றிருக்கும் ஒரே கலங்கரை விளக்கம் இதுவே. மொத்தம் பத்து தளங்களுடன் கூடிய இந்தக் கலங்கரை விளக்கத்தில் ஒன்பதாவது தளத்தில் மக்கள் பார்வையிடுவதற்காக வியூவிங் கேலரி ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அங்கே கம்பிகள் அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் பாதுகாப்பாக நின்று ரசிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கின்றது. பாதுகாப்புக் காரணங்கள் கருதி, முன்னர் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் 2013ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் மீண்டும் குறிப்பிட்ட நேரம் மட்டும் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்படுகிறது.

இந்தக் கலங்கரை விளக்கத்தின் பத்தாவது தளத்தில் உயர் பாதுகாப்பு ரேடார் அமைக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் பத்தாம் தளத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. கீழே இருந்து மேலே செல்வதற்கு அதிவேக மின் தூக்கியும்(lift) இங்குள்ளது. இருபத்து எட்டு கடல் மைல்கள் வரை இதன் ஒளி தெரியும். மேல் தளத்தில் அமைக்கப்படுள்ள ரேடார் மூலம் 100 கிலோ மீட்டர் வரை கடலில் உள்ள படகுகள் கப்பல்களை கண்டறிய முடியும். இங்குள்ள ரேடாரின் ஆன்டணாக்கள் பழுதாகியுள்ளதால் அவற்றை மாற்ற வேண்டும் என பெங்களூரை சேர்ந்த நிறுவனத்திற்கு கடலோர காவல் படையினர் தகவல் கொடுத்தனர், அதனடிப்படையில் தற்போது 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ராட்சத கிரேனுடன் வருகை தந்து பத்தாவது தளத்தில் இருக்கும் ஆன்டணாக்களை மாற்றி வருகின்றனர். இது மெரினாவிற்கு வந்தவர்களை ஆச்சரியப்பட வைக்கிற்றது...

Tags:    

மேலும் செய்திகள்