
சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜான் கொலை வழக்கில், மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் கடந்த 19ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் தாமாக வந்து நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய துரைசாமி என்பவர் ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.