சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிதாக கட்டப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்தை அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் புறக்கணிப்பதாகவும், பேரூராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துகளை வழியிலேயே தடுத்து வரி வசூலிப்பதால் பேருந்துகள் உள்ளே செல்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.