தாறுமாறாக ஓடிய கார்! நொடியில் நடந்த கோர விபத்து.. திண்டுக்கலில் அதிர்ச்சி | Dindigul
திண்டுக்கலில் நடந்த பயங்கர கார் விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது குடும்பத்துடன் காரில் பழனிக்கு சென்று கொண்டிருந்த நிலையில், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அய்யாலூர் பகுதியில் கார் விபத்துக்குள்ளானது. இதில் அப்பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் ராஜ்குமாரின் குடும்பத்தினர் காயங்களின்றி உயிர் தப்பினர்.