லட்டுகளை போட்டி போட்டு எடுத்து சென்ற மூதாட்டிகள்-சுவரில் ஏறி பெண்கள் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அமையகரம் கூட்டுச்சாலையில் புதிய பேருந்து நிழற்கூட திறப்பு விழாவின் போது வழங்கப்பட்ட லட்டுகளை மூதாட்டிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்... ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சி முடிந்தவுடன் நிழற்கூடத்தில் பெண்கள், மூதாட்டிகள் ஆவலுடன் அமர்ந்து பார்த்தனர். மேலும் விழாவின் போது வழங்கப்பட்ட லட்டுகளை போட்டி போட்டு மூதாட்டிகள் எடுத்துச் சென்றதுடன், பெண்கள் நிழற்கூடத்தில் கட்டப்பட்டிருந்த பலூன்களையும் மேலே ஏறி எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் சென்றனர்.