உடைத்த கடலையில் 5 நிமிடத்தில் 115 திருக்குறள் எழுதி உலக சாதனை படைத்த பெண்

Update: 2025-01-03 11:40 GMT

கும்மிடிப்பூண்டி அருகே தற்காலிக பெண் ஆசிரியர் ஒருவர், உடைத்த கடலையில் 5 நிமிடங்களில் 115 திருக்குறள்களை எழுதி உலக சாதனை படைத்துள்ளார். கும்மிடிப்பூண்டியை அடுத்த செங்கல் சூளைமேடு கிராமத்தைச் சேர்ந்த திலகவதி பாஸ்கர் என்பவர், சுண்ணாம்புகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், வாழ்வியல் நெறிகளைக் கொண்ட திருக்குறளை, தேசிய நூலாக்க வலியறுத்தியும், மாநில நூலாக்க வலியுறுத்தியும் பட்டாணி, கடலை பருப்பு போன்ற தானியங்களில் திருக்குறளை எழுதி சாதனை படைத்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக, தற்போது உடைத்த கடலையில் 5 நிமிடத்தில் 115 திருக்குறளை எழுதி இந்தியா புக் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இவர் இடம் பிடித்துள்ளார். இவரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்