ஒன்று திரண்டு அணையை திறந்து வைத்த திமுக- அதிமுக நிர்வாகிகள் - மகிழ்ச்சியில் மக்கள்
தர்மபுரி அருகே உள்ள சின்னாறு அணையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆளும் கட்சி எம்.பி மற்றும் எதிர்கட்சி எம்.எல்.ஏ. இணைந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டனர். பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியதை அடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் அணை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தர்மபுரி எம்.பி. மணி தலைமையில் ஆளுங்கட்சியினரும், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் அதிமுகவினரும் திரண்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, பாதுகாப்புடன் அனைவரும் இணைந்து அணையை திறந்து வைத்து மலர் தூவினர். ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தண்ணீரை திறந்தது விவசாயிகளுக்கும், பொதுமக்களும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.