மருத்துவர் இல்லாமல் உயிருக்கு போராடிய இளைஞர் - கதறும் உறவினர்கள் - கண்கலங்க வைக்கும் காட்சி
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிறுவண்டல் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பாண்டித்துரை ஆவரேந்தல் பகுதியில் உள்ள தனது சகோதரி கற்பகவள்ளி வீட்டில் வேலை பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாண்டித்துரை மீது மின்சாரம் தாக்கியது. உடனடியாக அவர் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு பணியில் மருத்துவர்கள் இல்லாததால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உயிருக்கு போராடிய பாண்டித்துரை உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாண்டிதுரையின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்... போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.