கொலைகார தொப்பூர் கணவாய்-ல் அடுத்த விபரீதம்... மொத்தமாக சிதைந்த கார்... பறிபோன உயிர்.. ஷாக்கில் தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே லாரி, கார், கண்டெய்னர் லாரி என அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில், காரில் வந்தவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவாய் பகுதியில் பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி சென்ற லாரி, கார், கண்டெய்னர் லாரி உள்ளிட்ட வாகனங்கள், ஒன்றோன்று அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 2 லாரிகளுக்கு இடையில் கார் சிக்கிக் கொண்டதில், காரில், மகாராஷ்டிராவில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற 4 பேரில், வில்லியம் ராஜ் என்பவர், உடல் நசுங்கி உயிழந்தார். உடன் வந்த ராஜா, ரேணுகா, ஜெனிபர் ஆகிய 3 பேர் காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.