"வன்முறை செய்தவர்கள் சொத்தை விற்று பாதிப்பு சரிசெய்யப்படும்" - முதல்வர் ஃபட்நாவிஸ் அதிரடி உத்தரவு
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறையில் ஈடுபட்டோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அறிவித்துள்ளார். நாக்பூரில், வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஃபட்நாவிஸ் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இதுவரை 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பலரை கைது செய்ய உள்ளதாக தெரிவித்த அவர், சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதே கலவரம் ஏற்பட காரணம் என்றும், சமூக வலைதளங்களில் 68 போஸ்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு டெலிட் செய்யப்பட்டதாகவும் கூறினார். வன்முறையால் ஏற்பட்ட சேதத்தை, கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்ற முதலமைச்சர் ஃபட்நாவிஸ், அவர்கள் பணம் தராவிட்டால், அவர்களது சொத்துக்களை விற்று பெறப்படும் என்றார். தேவைப்பட்டால் புல்டோசர் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.