சென்னை பெருங்களத்தூரில் 3 மாதமாக நடமாடிய மர்ம நபர்... யாரென வெளியான தகவல்

x

சென்னை பெருங்களத்தூரின் 58வது வார்டு பகுதியில் கடந்த 3 மாதங்களாக நடமாடிய மர்ம நபர் போலீஸில் பிடிபட்டார். பெருங்களத்தூர் மக்கள் ஆதங்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்ததை கவனித்த போலீசார், ரோந்து பணியின் போது மர்ம நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் வாடகை கார் ஓட்டுநர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த இளைஞரை மனநல காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்