"நம்மள முடிச்சிட்டீங்க போங்க..." - பிரியாணி, ஃப்ரைடு ரைஸ் பிரியர்களை ஷாக்கில் தள்ளிய சேதி.. கமுக்கமாக அரங்கேறிய சம்பவம்

Update: 2024-09-13 06:53 GMT

என்ன தான் வெரைட்டி தேடினாலும், புதுப்புது டிஷ்களை ருசித்தாலும் பிரியாணியை அடிச்சுக்க வேறு ஏதும் இருக்கா என்ன? தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி வைத்திருக்கிறது பிரியாணி...

வெஜ், நான் வெஜ் என என எதை எடுத்துக் கொண்டாலும் சரி.. பிரியாணி என சொன்னால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு கை பார்ப்பார்கள்...

பிரியாணி மட்டுமன்றி ஃப்ரைட் ரைஸ் மீதான மோகமும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதால், உணவகங்களில் பாஸ்மதி அரிசிக்கான தேவையும் கூடியிருக்கிறது.

இப்படி தேவை அதிகரிப்பு காரணமாக பாஸ்மதி அரிசிக்கான டிமாண்டும் இப்போது அதிகரித்திருக்கிறது...

அதிலும் இக்கால கட்டத்தில் சுப நிகழ்ச்சிகளிலும் பிரியாணி உணவையே விரும்புவதால் கேட்டரிங் வணிகங்களில் கூட முதன்மை தேவையாக மாறியுள்ளது பாஸ்மதி அரிசி..

கேரளா மற்றும் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய திருமணங்களில் பெரும்பாலும் பிரியாணி உணவு தான் அதிக அளவில் பரிமாறப்படுகிறதாம்...

இதுவே பாஸ்மதி அரிசியின் விலை அதிகரிக்க முக்கிய காரணம் என்கின்றனர் வியாபாரிகள்...

உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதால் அதன் தேவை அதிகரித்தே வருகிறது.

இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது....

Tags:    

மேலும் செய்திகள்