கூடா சகவாசத்தால் ஐடி ஊழியருக்கு நேர்ந்த கதி..பக்கா பிளான் போட்டு தூக்கிய போலீசார்
கோவையை சேர்ந்த ஐடி ஊழியரான மணிகண்ட பிரபுவுக்கு அவரது அலுவலக வாகனத்தை ஓட்டி வரும் ஹரிஷ்ஸ்ரீ என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் குறைந்த விலையில் கள்ளத்துப்பாக்கி கிடைக்கும் என ஹரிஷ்ஸ்ரீ கூறியதை தொடர்ந்து, மணிகண்ட பிரபு தனக்கு ஒரு துப்பாக்கி தேவை என கூறியுள்ளார். இதனையடுத்து பீகாரை சேர்ந்த குந்தன்ராஜா என்பவரின் மூலமாக இருவரும் கள்ளத்துப்பாக்கியை வாங்கியுள்ளனர். இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதிரடி சோதனை மேற்கொண்ட கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 குண்டுகளை பறிமுதல் செய்து 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.