தர்மபுரி மக்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி - அச்சத்தில் 55 கிராமங்கள்

Update: 2024-12-23 07:27 GMT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சித்தேரி மலைப்பகுதியில் உள்ள தோல்தூக்கி, சித்தேரி, சூரியக்கடை, விளாம்பட்டி உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, தோல் தூக்கி கிராமம் வழியாகத்தான் செல்ல முடியும். கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு ஃபெஞ்சல் புயல் காரணமாக இப்பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியதால், தோல்தூக்கி பகுதியில் மலைச்சரிவு ஏற்பட்டு, வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சாலை சீரமைக்கப்பட்ட பிறகு கடந்த ஒரு வாரமாக கார் பேருந்து போன்ற வாகனங்கள் சென்று வந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு முதல் பெய்த மழையால் 3-ஆவது முறையாக மீண்டும் மலைச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 55க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்