இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சிறுவயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்த பாலச்சந்தர், ஏராளமான தொலைக்காட்சி தொடர்களையும், திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர்நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியுள்ளார். நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், ரஜினிகாந்த், கமலஹாசன், ஏ.ஆர்.ரகுமான், சுஜாதா, ஸ்ரீபிரியா, விவேக், பிரகாஷ் ராஜ் என பல்வேறு திரையுலக பிரபலங்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் கே.பாலச்சந்தர்.....