உலக சாம்பியன்ஷிப் பைனல் செல்ல இன்னும் வாய்ப்பு.. இலங்கை கையில் இந்தியா உயிர்
பாக்சிங்-டே டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியாவிற்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இன்னும் வாய்ப்பு இருக்கிறதா?... புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்....
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதற்கு, முதல் அணியாக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா முன்னேறிவிட்டது.
ஃபைனலுக்கான ரேஸில் மீதமிருக்கும் ஒரு இடத்திற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய மூன்று அணிகள் போட்டா போட்டி போடுகின்றன.
மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியாவிற்கு,, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு மங்கிவிட்டது. என்றாலும் கால்குலேட்டர் கணக்குகள்படி இந்தியா ரேஸில் நீடிக்கிறது... வருகிற 3ம் தேதி சிட்னியில் தொடங்கும் நியூ-இயர் டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் இந்தியா நீடிக்க முடியும்...
அதே சமயம்,,, சிட்னி டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டும் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட முடியாது. சிட்னியில் வென்றாலும் இலங்கையின் கைகளில்தான் இந்தியாவின் வாய்ப்பு அடங்கியுள்ளது... சிட்னி டெஸ்ட்டில் வென்று ஆஸ்திரேலியாவுடனான தொடரை இலங்கை ஒன்றுக்கு பூஜ்யம் அல்லது 2க்கு பூஜ்யம் என வென்றால் மட்டுமே இந்தியாவால் இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்...
மாறாக சிட்னி டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்தாலோ அல்லது டிரா செய்தாலோ டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கனவு,, கானல் நீராகிவிடும்...
அதே சமயம் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற சிட்னி டெஸ்ட்டில் வென்றால் மட்டும் போதும்... இலங்கைக்கான வாய்ப்பு மிகக்குறைவாக உள்ள நிலையில், சொன்னபடி கணிப்புகள் நடந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?... .. இந்தியா பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசுமா?... ..பொறுத்திருந்து பார்ப்போம்.