இந்திய ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்..அஸ்திவாரத்தையே ஆடவைத்த ஆஸி...திணறும் இந்திய வீரர்கள்

Update: 2025-01-03 06:35 GMT

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆலன் பார்டர் கவாஸ்கர் டிராஃபிக்கான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா திணறி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று அதிகாலை போட்டி துவங்கியது. இந்த 5வது போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி டிராஃபியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்ற சூழலில் டாஸ் வென்றது இந்திய அணி... ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், சுப்மன் கில், விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்... ஸ்காட் போலன்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்டெல் ஸ்டார்க் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்... முதல் டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக துவங்கிய இந்திய அணி, 3வது போட்டியில் டிராவில் முடித்தாலும் 2 மற்றும் 4வது போட்டிகளில் சொதப்பிய நிலையில், இப்போது கடைசி டெஸ்ட் போட்டியிலும் திணறி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்