குசல் பெரேரா சதம் - இலங்கை ஆறுதல் வெற்றி

x

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஆறுதல் வெற்றி பெற்றது. நெல்சனில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய இலங்கை, குசல் பெரேராவின் அதிரடி சதத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்தும் அதிரடியாக ரன் சேர்த்தது. இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணி 14 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது. முதல் 2 போட்டிகளில் வென்ற நியூசிலாந்து, டி20 தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்