மினி லாரி கேபின் மீது ரகசிய அறை அமைத்து புதுச்சேரியில் இருந்து ஆந்திராவுக்கு மது கடத்திய மூன்று பேரை குண்டூர் மாவட்ட கலால் துறை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து குண்டூர் வழியாக ஆந்திராவின் பல்நாடு பகுதிக்கு மது கடத்தல் நடைபெறுவதாக, குண்டூர் மாவட்ட கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்ட வந்த போலீசார், மினி லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். அப்போது முன்பக்கத்தில் கேபின் மீது ரகசிய அறை அமைத்து நூதன முறையில் மது பாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியுடன் மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பாலகிருஷ்ணா, மஸ்தான் ராவ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.