பவுலிங்கில் வாங்கிய அடி..வெகுண்டெழுமா இந்தியா...எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Cricket | India
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆலன் பார்டர் கவாஸ்கர் டிராஃபிக்கான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களை எடுத்துள்ளது. சிட்னியில் நடைபெறும் இந்த 5வது போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி டிராஃபியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்ற சூழலில் விளையாடத் துவங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்... பண்ட் 40 அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். முடிவில் 72.2 ஓவரில் இந்தியா 185 ரன்கள் எடுத்திருந்தது.
ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்டெல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்... ஆஸ்திரேலியா தற்போது பேட்டிங் செய்யத் துவங்கிய நிலையில் மொத்தம் 9 ரன்களில், 2 ரன்கள் எடுத்த உஸ்மன் கவாஜாவின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.